நரேந்திர மோடியோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ள ரணில் விக்ரமசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியாவிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக பிரதமரின் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய புலனாய்வு சேவையான றோ திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல், இலங்கையின் அரசியல் நிலைமைகள், பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தை புதுடெல்லியில் உள்ள தாஜ் ஹொட்டலில் நடைபெற்றது.

பிரதமர் உள்ளிட்ட 15 பிரதிநிதிகள் நேற்று முன்தினம் இந்தியா புறப்பட்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.