கூட்டு எதிர்க்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த மூன்று ஆண்டுகளில் பல பௌர்ணமி (போயா) தினங்கள் கடந்துள்ள போதிலும் கூட்டு எதிர்க்கட்சிக்கு இதுவரை ஆட்சியை பிடிக்க முடியவில்லை என ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் பௌர்ணமி தினங்களுக்கு அடுத்து தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக கூறி வந்துள்ளனர்.

பல பௌர்ணமி தினங்கள் கடந்து, நல்லாட்சி அரசாங்கமே தொடர்ந்தும் ஆட்சியில் இருந்து வருகிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்.

அரசாங்கத்தை எந்த வகையிலும் மாற்ற முடியாது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பான விடயத்தில் கூட்டு எதிர்க்கட்சி கனவு கண்டு வருகிறது எனவும் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.