ஐ.தே.கட்சியில் மீண்டும் இணையும் அரசியல்வாதிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலகிச் சென்ற இரண்டு முக்கிய அரசியல்வாதிகளை அந்த கட்சி மீண்டும் தமது கட்சியில் இணைத்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.

இவர்களில் ஒருவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மற்றைய நபர் எதிர்க்கட்சியுடன் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த தேர்தல் வெற்றிக்காக கட்சியில் இருந்து விலகிச் சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அமைய இவர்கள் இருவரும் கட்சியில் இணையவுள்ளதாக பேசப்படுகிறது. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.