முழு இராணுவத்தினரையும் திரும்ப அழைத்திருப்போம்! நல்லாட்சி அரசிற்கு சவால் விடும் கோத்தா

Report Print Jeslin Jeslin in அரசியல்

இந்த அரசாங்கம் சர்வதேசத்தை வென்றிருப்பதாக கூறுவது உண்மையாயின், ஐ.நா. சமாதானப் படையில் சேவையாற்றச் சென்ற இராணுவக் கட்டளைத் தளபதியை திருப்பியழைக்குமாறு விடுத்திருந்த ஐ.நா.வின் அறிவிப்பை நிராகரித்துக் காட்டட்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டையில் இன்றைய தினம் இடம்பெற்ற எளிய அமைப்பின் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று ஐரோப்பிய நாடுகள் எமது நாட்டு இராணுவ வீரர்களை புறக்கணிக்கும் நிலைமை காணப்படுகின்றது.

இறுதி யுத்தத்தில் கலந்துகொண்டவர்களை அவர்கள் தங்களது நாடுகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காத ஒரு நிலைமை காணப்படுகின்றது.

ஐ.நா, எமது நாட்டு இராணுவக் கட்டளைத் தளபதி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்டதற்காக மாலி நாட்டிலிருந்து திருப்பியழைக்குமாறு இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எமது அரசாங்க காலத்தில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்தால், நாம் முழு இராணுவத்தினரையும் திருப்பியழைத்திருப்போம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.