அபிவிருத்தி என்ற ரீதியில் வட மாகாணசபை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை

Report Print Theesan in அரசியல்

அபிவிருத்தி என்ற ரீதியில் வட மாகாணசபை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா - ஆச்சிபுரத்தில் ஏழை குடும்பம் ஒன்றிற்கு நேற்றைய தினம் தற்காலிக வீடொன்று அமைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வட மாகாணசபையின் காலம் நிறைவடையவுள்ள நிலையில் மாகாண சபையின் செயற்பாட்டில் திருப்தி அடைந்துள்ளீர்களா? என ஊடகவியலாளர் வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மாகாணசபை நிறைய நல்ல விடயங்களை செய்திருக்கலாம். ஆனால் மலசலகூடங்கள் இல்லாத கொட்டகைகள் எமது பிரதேசத்தில் இருக்கின்றன.

அபிவிருத்தி என்ற ரீதியில் மாகாணசபை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. எனினும் எமது மக்களின் விடுதலை தொடர்பில் நிறைய விடயங்களை செய்துள்ளது.

மத்திய அரசாங்கம் எமக்கு வழங்கும் நிதி போதாது என நாம் கூறினோமே தவிர நாம் நிதியை தேடவில்லை.

எமக்கு ஆதரவளிக்கின்ற அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டு நிதியை திரட்டி நிறைய விடயங்களை சாதித்திருக்கலாம் என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...