அனந்தி சசிதரனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் அங்குரார்பண நிகழ்வு

Report Print Sumi in அரசியல்

யாழில் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் அங்குரார்பண இடம்பெற்றள்ளது.

குறித்த நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இடம்பெற்றுள்ளது.

நானும் எனது ஆதரவாளர்களும் இணைந்து குறித்த கட்சியை வெளியரங்கப்படுத்துகின்றோம். இந்த கட்சியின் பெயர் ‘ஈழ தமிழர் சுயாட்சி கழகம்’ என தெரிவித்துள்ளார்.

இதன்போது வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில்,

திட்டமிட்ட பேரினவாத சூழ்ச்சிகளின் மத்தியில் வடக்கு, கிழக்கில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களின் தேசிய அரசியல் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் வகையில் தங்களை தாங்களே ஆளும் மக்களின் இறைமையை அடிப்படையாக கொண்ட சுயநிர்ணயத்துடன் கூடிய அதிகபட்ச சுயாட்சியை வென்றெடுப்பதே இக் கட்சியின் நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். .