இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் மோடி அதிருப்தி!

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த 2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இந்திய - இலங்கை கூட்டு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் கடும் தாமதம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் நேற்று மதியம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகளை சந்தித்த போதே இந்திய பிரதமர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர்,

ராஜதந்திர பணிகள் சம்பந்தமாக நான் அதிகமான காலத்தை இலங்கைக்காகவே செலவிட்டுள்ளேன். இப்படி இருக்கும் நிலைமையில் இந்தியாவினால் மேற்கொள்ளும் பணிகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து கிடைக்கும் பதில்கள் சம்பந்தமாக நான் கவலையடைகின்றேன்.

இந்திய அரசாங்கம் தொடர்பாக ஏதேனும் சந்தேகமோ பிரச்சினைகளோ இருந்தால், எந்த தயக்கமும் இன்றி அது பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் மோடி கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

இந்திய அரசு தொடர்பில் தாம் உட்பட இலங்கையர்களுக்கு எந்த சந்தேகமோ, பிரச்சினைகளோ இல்லை என கூறியுள்ளார். இப்படியான தவறான புரிதல் ஏற்பட ஏதேனும் காரணங்கள் இருக்குமாயின் அது குறித்து வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொடர்புகள் வலுவான நிலையை எட்டியதாக சுட்டிக்காட்டியுள்ள இந்திய பிரதமர், அயல் நாடான இலங்கையின் அபிவிருத்தியையும் மற்றும் சுபிட்சத்தையும் ஏற்படுத்துவதே இந்தியாவின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளை ஆராயும் போது இரு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்தும் இருக்க வேண்டிய பாதிக்கப்படாத நெருக்கமான உறவின் முக்கியத்துவத்தையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இருத்தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது சம்பந்தமான நேபாளத்தின் காத்மண்டு நகரில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது 2017ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மேற்கொள்வது தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எவரும் இலங்கை மண்ணை பயன்படுத்த வாய்ப்புகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதிப்பட கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கலாசார துறை சம்பந்தமாகவே உலகில் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

Latest Offers