மூடிய அறையில் ரணில் - மோடி இரகசிய பேச்சு!

Report Print Murali Murali in அரசியல்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூடிய அறையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் விஜயமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றிருந்த நிலையில் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருந்தார்.

இந்த சந்திப்பு புது டில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கையில் இருந்து சென்ற அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் மூடிய அறைக்குள் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது முக்கிய பல விடயங்கள் குறித்து பேசியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

இதேவேளை, இந்த சந்திப்பின் பின்னர் இரண்டு நாட்டு தலைவர்களும் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers