மைத்திரி மகிந்தவுக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்த இரண்டு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நம்ப தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடையில் நிலவும் நெருக்கடி உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் அனுசரணையில் மகிந்த - மைத்திரி இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை தொடர்பான கடந்த காலங்களில் பேசப்பட்டது.

எனினும் எதிர்பாராத விதமாக அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.

இதனால், இம்முறை எந்த அரசியல் தரகரின் உதவியும் இல்லாமல் உயர் மட்ட தலைவர்கள் இடையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உரிய அரசியல் வேலைத்திட்டம் மற்றும் கால அட்டவணைக்கு அமைய இம்முறை பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் பேச்சுவார்த்தை நிறைவு செய்து தீர்மானம் ஒன்றுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

Latest Offers