அமைச்சர்களை கண்டுபிடிக்க மைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு! விசாரணைகள் தீவிரம்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களிடம் வெளியிடும் அமைச்சர்களை கண்டுபிடிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியான “றோ” அமைப்பின் கொலை சதித்திட்ட கதை தொடர்பான தகவலை தனக்கு நான்கு அமைச்சர்கள் வழங்கியதாக இந்து பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி தொடர்பான விடயங்களை தெளிவுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடினர்.

இதனையடுத்து இந்த செய்தி வெளியான விதம், அதன் பின்னணி குறித்து மூன்று அறிக்கைகளை இந்திய பிரதமர் கோரியிருப்பதாக இராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசாரணைகளை நடத்தி வரும் விசேட விசாரணை குழு தொலைபேசி தரவுகள் உட்பட ஏனைய தரவுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.