நாமலுக்கு வழியை ஏற்படுத்திக்கொடுப்பதே மகிந்தவின் தேவை - ரில்வின் சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை பூஜ்ஜியம் என்ற நிலைமைக்குள் தள்ளியுள்ளதாகவும் குறைந்தது ரூபாயின் பெறுமதி இழப்பை தடுக்க கூட அரசாங்கத்திடம் வேலை திட்டங்கள் இல்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, உதய கம்மன்பில, விமல் வீரவங்ச போன்றவர்களுக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி எந்த கவலையும் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சித்து வருகிறார்.

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தாம் மேற்கொண்ட கொள்ளையடிப்புக்கு தொடரப்படும் வழக்குகளை தடுக்கும் தேவையே இருக்கின்றது எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers