விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் கடும் மோதல்?

Report Print Murali Murali in அரசியல்

வடக்கு மாகாணத்தில் அரசிய தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள மோதல் நிலை வெளிப்பட தொடங்கியுள்ளது.

கடந்த சில காலமாக கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலையானது தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. சமகால அரசியல் நகர்வுகள் இதனை நன்கு வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான மோதல் நிலை கடுமையாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏட்டிக்குப் போட்டியாக விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை எதிர்வரும் 24ஆம் திகதி அறிவிக்க போவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சி.வி.விக்னேஸ்வரன், எமது தமிழ்ப் பிரதிநிதிகள், தோசையைக் கூட போடத் தெரியாதவர்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அத்துன், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், மேடைப் பேச்சுக்கே ஏற்றவர்கள் என்றும், வாய் வீரம்காட்டுபவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், புகழ்ச்சிக்கு மயங்கி, அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பவர்கள் என்றும் கூறியிருந்தார்.

இதேவேளை, விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது நாம் செய்த பாவம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா ஒட்டுசுட்டானில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் போது கூறியிருந்தார்.

அந்தப் பாவத்தின் விளைவை கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் மீதும், விக்னேஸ்வரன் மீது கூட்டமைப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers