கோத்தபாயவிற்கு அஞ்சும் மகிந்த! காரணம் இதுதான்

Report Print Murali Murali in அரசியல்

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக்கொள்வார் என்று மகிந்த ராஜபக்ச அஞ்சுகிறார்.”

பிரபல சட்ட நிபுணரான கோமின் தயாசிறி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கோத்தாபய ராஜபக்சவை விட, பசில் ராஜபக்சவை ஊக்குவிக்கவே மகிந்த ராஜபக்ச முயற்சிப்பதாக நான் நினைக்கிறேன். 2009ஆம் ஆண்டு வரை, மகிந்த ராஜபக்ச மிகவும் நல்லதொரு தலைவராக இருந்தார்.

எனினும், அவரைச் சுற்றியிருந்தவர்கள், அவரைக் கெடுத்து விட்டனர். 2015அம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில் அவர்கள் நல்ல வேலை செய்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக் கொள்வார் என்று மகிந்த அஞ்சுகிறார்.

10 ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்குப் பின்னர், ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரம் மாறும் போது, நாமல் ராஜபக்சவுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகும் என்றும் மகிந்தவுக்கு அச்சம் உள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.