றோவிடம் பணத்தை பெற்ற அமைச்சர்கள் யார்? நாமல் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியாவின் றோ புலனாய்வு சேவையிடம் பணத்தை பெற்ற அமைச்சரவையில் இருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்தியாவின் றோ புலனாய்வு சேவை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடானவை எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் றோ உட்பட வெளிநாட்டு உளவு பிரிவுகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.