அரசியல்வாதிகள் பாட்டு பாடுகின்றனர்: மருத்துவர்கள் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் பலர் தமது வேலைகளை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அரசியல்வாதிகள் பாடல்களை பாடுவதாகவும் மருத்துவர்கள் பொருளாதாரம் பற்றி பேசுவதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாம் தற்போது எமது வேலைகளை மாற்றி செய்துக்கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகள் பாட்டு பாடுகின்றனர். பாட்டு பாட வேண்டியவர்கள் வேறு எதனையோ செய்துக்கொண்டிருக்கின்றனர்.

மருத்துவர்கள், பௌத்த பிக்குகள் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர். இவர்கள் அனைவரும் தாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய ஆரம்பித்தால் நாடு முன்னேறும். ஆனால், தமது வேலை விட்டு விட்டு வேறு வேலைகளை செய்கின்றனர்.

மருத்துவர்கள் நோயாளிகள் பற்றி பார்ப்பதில்லை. அவர்கள் நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர். அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டிய அரசியல்வாதிகள் வேறு வேலைகளை செய்கின்றனர்.

அனைத்தையும் நாம் சிக்கலாக்கிக் கொண்டுள்ளோம். எதிர்காலத்தில் இந்த சிக்கல் களைப்பட வேண்டும். எதிர்காலத்திலும் மற்றுமொருவர், இன்னுமொருவரின் வேலைகளை செய்ய முடியாது.

தொலைக்காட்சிகளை பார்க்கும் அரசியல்வாதி ஒருவர் மைக்கை எடுத்து கொண்டு ஏதாவது ஒரு அதிமேதாவி தனமான கதைளை கூறுவார்.

இடைக்கால அரசாங்கம் பற்றி பேசுகின்றனர். அப்படியான அரசாங்கம் அமையாது. அது பற்றிய எந்த பேச்சுக்களும் இல்லை.

தொலைக்காட்சிகளை பார்க்கும் மக்கள் இப்படி நடக்காமல் என்று எண்ணுவார்கள் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.