ஏக்கிய ராஜ்யம்- ஒருமித்த நாடு சுமந்திரன் கூறும் விளக்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலே மூன்று மொழிகளிலும் “ஏக்கிய ராஜ்யம்- ஒருமித்த நாடு" என்று கூறப்படுவதுடன் இச்சொற்தொடருக்கான வரைவிலக்கணமும் அதே உறுப்புரையில் சொல்ல பிரேரிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியா? ஒருமித்த நாடா? என வடமராட்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நிகழ்த்திய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஏக்கிய ராஜ்யம் ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாததும் பிரிக்க முடியாததும், அரசியலமைப்பு திருத்தங்களுக்குகான அதிகாரம் பாராளுமன்றத்திடமும் மக்களிடமும் விடப்பட்டிருக்கிற ஒரு நாடு என்ற வரைவிலக்கணத்தை கொண்டது.

இதிலே ஆட்சிமுறையை குறிக்கும் unitary state மற்றும் ஒற்றையாட்சி என்பவை தவிர்க்கப்பட்டு நாட்டின் ஒருமித்த சுபாவத்தை குறிக்கும் மேற்சொன்ன சொற்பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ் மக்களுடைய இணக்கம் இல்லாமலே அரசியலமைப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன.

பிரிக்கப்படாத நாட்டில் வாழ நாம் இணங்க தயார். ஆனால் அதற்கான நிபந்தனை ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும். இதை தெற்கில் சிங்கள பகுதிகளில் சொல்லியிருக்கிறேன்.

நாடு தான் பிரிக்கப்பட முடியாது. ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்பட வேண்டும். இதை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கின்றோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Latest Offers