மகிந்த ராஜபக்சவை மனதார விரும்பும் பிரதியமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்பதை தான் மனதார விரும்புவதாகவும் அதற்காக கூட்டு எதிர்க் கட்சியினருடன் இணைய எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முத்துஹெட்டிகம இதனை கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே பதவி வகிப்பார் எனவும் அதனை எவராலும் மாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு கிடைத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர் மேற்கொண்டு வரும் ஊழல், மோசடிகள் மற்றும் தரகு பணம் பெறும் நடவடிக்கைகள் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயருக்கு வெட்கம்.

தவறு செய்தவர்களுக்கு முடிந்தால் தண்டனை வழங்குகள் என்று பிரதமருக்கு சவால் விடுக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை தக்கவைக்க தனியான கொடுப்பனவுகள், வாகனங்களை வழங்க நேரிட்டது. 2020 ஆம் ஆண்டுக்கு பிறகும் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி.

அப்போது ஏற்படும் பிரதமர் பதவிக்கான வெற்றிடத்திற்கு நாட்டை சிறப்பாக ஆட்சி செய்யக் கூடிய தலைவர் தேவை. அதற்கு மகிந்த ராஜபக்சவே தகுதியானவர்.

கோத்தபாய ராஜபக்ச தொடர்பான குமார வெல்கமவின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கின்றேன். அவரது நிலைப்பாடு சரியானது.

இதேவேளை, நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் விலை சூத்திரம் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் ஒன்று எனவும் நிஷாந்த முத்துஹெட்டிக குறிப்பிட்டுள்ளார்.