ஈழ மண்ணில் பிறந்த இளைஞர் தென்னிந்தியாவில் சர்வதேச விருதுகளை குவித்துள்ளார்!

Report Print Yathu in அரசியல்

தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் பல்வேறுபட்ட கலைஞர்கள் இந்த மண்ணில் உருவாக்கப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் தாயகக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மண்ணில் இருந்த காலப்பகுதியில் பல்வேறு பட்ட கலைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள்.

கலை என்பது மனிதனது உள்ளத்தில் இருந்து வருகின்ற ஒருவகையான உணர்வுகள். நம்பிக்கையும் எண்ணங்களும் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருந்தால் அவர்களால் சாதிக்க முடியும்.

இந்த ஈழ மண்ணில் பிறந்து வளர்ந்த டேவிற் யுவராஜன் தென்னிந்தியாவில் தனக்கென தடம்பதித்து சர்வதேச விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்திருக்கின்றார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் தாயகக் கலைஞர் டேவிற் யுவராஜன் உட்பட 17 கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.