கோத்தாவின் வருகையில் பறிபோகும் நாமலின் எதிர்காலம்? அச்சத்தில் மகிந்த!

Report Print Jeslin Jeslin in அரசியல்

கோத்தாவை அடுத்த அதிபர் தேர்தலில் நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக்கொள்வார் என்று மகிந்த ராஜபக்ச அஞ்சுகிறார் என, இலங்கையின் பிரபல சட்ட நிபுணரான கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளதாக தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கேள்வி: பசில் ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக உயர்த்தப்பட்டால் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு என்ன நடக்கும்?

பதில்: கோத்தபாய ராஜபக்சவை விட, பசில் ராஜபக்சவை ஊக்குவிக்கவே மகிந்த ராஜபக்ச, முயற்சிப்பதாக நான் நினைக்கிறேன். அதனால் தான், மகிந்தவின் புதிய கட்சிக்கு, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். பசில் ஒரு மக்கள் தலைவர் அல்ல.

மகிந்த ராஜபக்ச 2009ஆம் ஆண்டு வரை, மிகவும் நல்லதொரு தலைவராக இருந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்கள், அவரைக் கெடுத்து விட்டனர். மக்கள் அவரை ‘மகாராஜா’ என்று அழைத்தார்கள்.

2015இல் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில் அவர்கள் நல்ல வேலை செய்தனர். அவர் நல்லாட்சிக்காக இழந்தார், என குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: இரட்டைக் குடியுரிமை கொண்டிருப்பதால் கோத்தபாய ராஜபக்சவினால், தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாதா?

பதில்: தனது இரட்டைக் குடியுரிமையைக் கைவிடாமல் அவர் இப்போது ஒரு மிகப்பெரிய தவறைச் செய்கிறார். அவர் கடைசி நிமிடம் வரை காத்திருக்கக் கூடாது. அது மிகப் பெரிய ஆபத்து.

கோத்தபாய ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் செல்வாக்குள்ளவர் அல்ல. ஆனால் அவருக்கு தொழில்துறையினர் மற்றும் வணிக சமூகத்தில் செல்வாக்கு உள்ளது.

கோத்தா வினையாற்றுபவர், கடுமையான ஒழுக்கத்தை பின்பற்றுபவர் என்று அவர்களுக்குத் தெரியும். போர் மற்றும் நகர்புற அபிவிருத்தியில் அவர் செய்ததை அவர்கள் அறிவார்கள்.

கோத்தாவை அடுத்த அதிபர் தேர்தலில் நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக் கொள்வார் என்று மகிந்த அஞ்சுகிறார். 10 ஆண்டுகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்குப் பின்னர், ஐதேகவுக்கு அதிகாரம் மாறும் போது, நாமல் ராஜபக்சவுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகும் என்றும் மகிந்தவுக்கு அச்சம் உள்ளது.

பசில் ராஜபக்ச மிகவும் சக்தி வாய்ந்தவர். ஆனால் அவருக்கு மக்களின் ஆதரவு குறைவு.

சிறிலங்கா பொதுஜன முன்னணி கடைசியாக நடத்திய கொழும்பை நோக்கி மக்கள் சக்தி என்ற பேரணி, கோத்தாபய ராஜபக்சவின் மதிப்பைக் குறைக்கும் வகையில் அமைந்தது. அது மகிந்த ராஜபக்சவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கோத்தபாய ராஜபக்ச இந்த பேரணியை விட்டு வெளியே நின்றிருக்க வேண்டும். எனது ஆலோசனை என்னவெனில், அவர், கட்சியின் நியமனத்தைப் பெற வேண்டும். சுதந்திரமான வேட்பாளராக நின்று வெற்றி பெற முடியாது.

அவரது குழுவில் உள்ள இரு கூட்டாளிகள் வெளியேற்றப்பட வேண்டும், அவர்கள் யார் என்று அவரிடம் கூறினேன்.

இந்த நாட்டுக்குச் சேவையாற்றுவதில் அவர் தீவிரமாக இருந்தால், அவர் குழந்தைச் சகோதரர் என்ற மனநிலையில் இருந்து வளர வேண்டும். அவர் தன்னை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: ஆனால், மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக நிறுத்துவதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லையே.

பதில்: அவரால் மீண்டும் போட்டியிட முடியாது, மகிந்தவுக்கு எந்த வாய்ப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் சரியான நேரத்தில், 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு சவால் விடுக்கவில்லை.

தற்போது சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இல்லை என்று சொல்வதற்கு மிகவும் தாமதமாகி விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வீழ்ச்சி என்னவாக இருக்கும்?

பதில்: சிறிலங்கா பொதுஜன முன்னணி வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு சக்திவாய்ந்த, செயற்திறன் மிக்க, தொலைநோக்குடைய தலைவர் தேவை. அவர் குட்டி அரசியலுக்குக் கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது. அந்த நபராக இருப்பதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers