றோ உளவுப் பிரிவிற்கு தகவல் வழங்கும் நான்கு அமைச்சர்கள்

Report Print Kamel Kamel in அரசியல்

றோ உளவுப் பிரிவிற்கு நான்கு அமைச்சர்கள் தகவல் வழங்கி வருகின்றனர் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், விவசாய அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதான சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு றோ உளவுப் பிரிவிற்கு இரகசிய தகவல்களை வழங்கிய இரண்டு பேரின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சர்கள் யார் என்பது பற்றி விரைவில் அம்பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா மற்றும் சீனாவிற்கும் எதிராக கருத்து வெளியிட்டதாக அமைச்சரவையின் நான்கு பேர் தகவல் வழங்கியதாக இந்திய பெண் ஊடகவியலாளர் வெளியிட்ட தகவல் பொய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இவ்வாறு தகவல் வழங்கிய நான்கு அமைச்சர்கள் யார் என்பது குறித்து உடனடியாக கண்டறியப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தகவல் வழங்குவோரின் சிறகுகளை வெட்ட வேண்டியது ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பொறுப்பாகும் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.

Latest Offers