நாலக்க சில்வாவிடம் இதுவரையில் 28 மணித்தியாலங்கள் விசாரணை

Report Print Kamel Kamel in அரசியல்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவிடம் இதுவரையில் 28 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக நாலக்க சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் நாலக்க சில்வாவிடம் ஒன்பது மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன் நாளையும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இன்று முற்பகல் 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான நாலக்க சில்வா, இரவு 7.00 மணி வரையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

நாலக்க சில்வாவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers