ஜனாதிபதி பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு!!

Report Print Murali Murali in அரசியல்

மலையக மக்களுக்கு முதற் தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கலந்துரையாடலின் போது மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரின் காணிகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers