வடக்கில் இன்றிலிருந்து ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் ஆரம்பம்

Report Print Rakesh in அரசியல்

முதலாவது வட மாகாணசபையின் ஆயுள் காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில் வட மாகாண ஆளுநர் குரே தலைமையிலான நிர்வாகம் இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது.

அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி மாகாணசபையின் முதலாவது அமர்வு ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.