சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சியில் இணைவதா? மனம் திறந்தார் அமைச்சர் மனோ கணேசன்

Report Print Theesan in அரசியல்

சீ.வி.விக்னேஸ்வரனின் குடை சிறியது, எனக்கு பெரிய குடையே தேவை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நேற்று காலை தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்ட வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி எனும் புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் வவுனியாவில் வைத்து குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் மேலும் கூறுகையில், அவரின் குடையில் எனக்கு இடமில்லை. அது சின்ன குடை. எனக்கு பெரிய குடை வேண்டும். பெரிய குடையானதன் பின்னர் பார்க்கலாம் என கூறியுள்ளார்.

Latest Offers