முடிந்தது வடமாகாண சபையின் ஆயுட்காலம்! பிரித்தானிய தூதுவர் கவலை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் சில மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் இதுவரை மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளில் ஆறு மாகாண சபைகளின் பதவிக்காலமும், புதிய பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படாமல் முடிவுக்கு வருவதையிட்டு, பலர் ஏமாற்றமடைவார்கள். உரிய காலத்தில் தேர்தல் நடத்துவதன் மூலமே தமது நாடுகளின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்.” என பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் சில மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் இதுவரை தேர்தல் நடத்தப்படாமல், மாகாணங்களின் அதிகாரம் ஆளுநரின் கைகளுக்கு சென்றுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம் வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து ஆளுநரின் கைகளுக்கு சென்றுள்ளது.

இதையடுத்தே இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.