நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மார்ச் 7ஆம் திகதி விசாரணைக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து கொண்டு தவறான வழியில் சம்பாதித்த 15 மில்லியன் ரூபாய் பணத்தை என்.ஆர்.கன்சல்டன்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 4 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அமைய வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் இதன் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச கடந்த ஆட்சிக்காலத்தில் தவறான வழியில் சம்பாதித்த 15 மில்லியன் ரூபாய் பணத்தை என்.ஆர்.கன்சல்டன்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.