வவுனியாவிற்கு அமைச்சர் மனோகணேசன் விஜயம்

Report Print Theesan in அரசியல்

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் இன்று காலை வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன் போது வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா நகரசபை மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பழைய பேருந்து நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.

வர்த்தக நிலையங்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் பேருந்துச் சேவைகளின்றி வெறிச்சோடிக் காணப்படுதல் தொடர்பாக வவுனியா வர்த்தகச் சங்கத்தலைவர் எஸ்.சுஜனால் மனோகணேசனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பின்னர் நகரசபைத் தவிசாளர் இ.கௌதமனின் அழைப்பிற்கமைய இலுப்பையடி பகுதியிலுள்ள தினச்சந்தைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன் போது தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் பணிகள் முடிவடைந்துள்ளது குறித்து தினச்சந்தை வியாபாரிகளினால் மனோகணேசனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பின்னர் தினச்சந்தைக்கு பின்னாலுள்ள குளத்தினையும் பார்வையிட்டு சென்றுள்ளார்.

இதன்போது நகரசபை தவிசாளர், உபதவிசாளர், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தினச்சந்தை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.