புலிகளின் தலைவர்களான ராம் மற்றும் நகுலனுக்கு கோத்தபாய பணம் கொடுத்தார்: சம்பிக்க

Report Print Steephen Steephen in அரசியல்

விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சம்பளம் வழங்கியதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவவை பிரதேசத்தில் புதிய வர்த்தக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச, இவர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக நான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, புலிகளின் இந்த தலைவர்கள் கிழக்கில் தனக்கு வாக்குகளை பெற்று தருவார்கள் எனக் கூறினார்.

கிழக்கில், கொலைகளை செய்த, ராம், நகுலன் போன்ற புலிகளின் தலைவர்களுக்கு கோத்தபாய சம்பளம் வழங்கினார். ராம், நகுலன் போன்ற பயங்கரவாதிகள் மொனராகலை, கதிர்காமம் பகுதிகளில் சுமார் 600 மக்களை கொலை செய்தவர்கள்.

இவர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர். இந்த பயங்கரவாத தலைவர்களுக்கு ராஜபக்சவினர் இழப்பீடு கொடுத்தனர்.

அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை இராணுவ புலனாய்வுப் பிரிவில் இணைத்துக் கொண்டு, புலிகளுக்கும், அவர்களின் ஆயுதப் பிரிவுக்கும் சம்பளம் வழங்கினார்கள்.

புலனாய்வுப் பிரிவுகள் மூலம் புலிகளின் தலைவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று முடிந்தால் கூறுமாறு ராஜபக்சவினருக்கு நான் சவால் விடுக்கின்றேன்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் கடும் போர் நடக்கும் பகுதிக்கு செல்லாதவர்களே இன்று பேஷ்புக்கில் வீரர்களை போன்று துள்ளுக்கின்றனர் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.