சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி! சம்பந்தன் கடும் ஆவேசம்

Report Print Rakesh in அரசியல்

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்தமை தொடர்பிலும், அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் பின்னர் உரிய பதிலைக் கூறுகின்றேன். அதுவரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஆவேசமாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதிய கட்சிக்கான (தமிழ் மக்கள் கூட்டணி) அறிவிப்பை நேற்று வெளியிட்டு அது தொடர்பில் நீண்ட உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தனை “லங்காசிறி” இன்று தொடர்புகொண்டு கேட்டபோது,

“விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்புத் தொடர்பான தகவலை அறிந்தேன். அவர் ஆற்றிய உரையை நான் இன்னமும் பார்க்கவில்லை. அதன் பின்னர் அது தொடர்பில் உரிய பதிலளிப்பேன்.

அதுவரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டும். ஆழமாக ஆராய்ந்து உரிய பதிலை தகுந்த முறையில் கொடுக்கவேண்டும்” - என்றார்.