அரசை எச்சரிக்கும் அமைச்சர் திகாம்பரம்!

Report Print Steephen Steephen in அரசியல்

தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடாது போனால், தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரம் கொழும்பில் இன்று தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்காமல் தான் தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிப்பதில் பலனில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் கொள்ளுப்பிட்டியில் உள்ள மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை சம்பந்தமாக தான், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு வரவு செலவுத் திட்டம் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காத எந்த சந்தர்ப்பதிலும் அரசாங்கம் தொடர்பாக தீர்மானம் எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers