இந்தியாவையும் அரவணைத்து செல்ல வேண்டும்! மகிந்த சமரசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

இந்தியாவுடன் கடந்த வருடம் கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் பணிகளை கூட்டு வர்த்தகமாக நடத்திச் செல்ல இந்தியாவுக்கு வழங்குவதாக குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் கொழும்பு துறைமுகத்தின் முனையம் ஒன்றை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்து முன்னெடுத்துச் செல்ல வழங்குவதில்லை பிரச்சினையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகில் ஏனைய நாடுகளை உபசரிப்பதை போல இந்தியாவையும் அரவணைத்து செல்ல வேண்டும். இந்தியாவுடன் இலங்கைக்கு வலுவான உறவுகள் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

Latest Offers