ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தில் இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளை பாராட்டும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சிக்கும் பெரிய பிளவும் ஒற்றுமையின்மையும் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் முன்னோக்கி செல்கின்றோம்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நாளுக்கு நாள் பிளவுப்பட்டு மோதிக்கொண்டிருக்கின்றனர் எனவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.