புதிய சட்டம் பழைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட பயங்கரமானது

Report Print Steephen Steephen in அரசியல்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யும் போர்வையில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விடய பயங்கரமான சட்டம் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய போவதாக கூறி, அதில் உள்ள சில பந்திகளை நீக்கி விட்டு அதனை விட பயங்கரமான பந்திகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

புதிய சட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அத்தியவசிய சேவை என அறிவிக்கப்பட்ட தொழில் ஒன்றில் ஈடுபடும் ஒருவர், தொழிலில் ஈடுபடாமல் வேலை நிறுத்தப் போராட்டங்கள் போன்ற எதிர்ப்புகளில் ஈடுபட்டால், அதுவும் பயங்கரவாத செயலாக கருதப்படும்.

இதனால், இந்த புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers