விடுதலைப் புலிகளுக்கு நஷ்டஈடு வழங்க கூடாது!

Report Print Murali Murali in அரசியல்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க முன்வராத அரசாங்கம் சர்வதேச நிபந்தனைக்கு அமைய புலிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நிதிச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “முட்டாள் தனமான பொருளாதார கொள்கைகளின் மூலமாகவே இன்று நாட்டின் ரூபா வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் எமது நாட்டின் சாதாரண தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பை கண்டுள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

Latest Offers