அரசியல் கைதிகள் இல்லை! மாற்று யோசனை கோருகிறார் நீதி அமைச்சர்

Report Print Ajith Ajith in அரசியல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வது குறித்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய வேறேதும் நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கான யோசனையை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் நீதி அமைச்சர் தலதா அதுகோரல கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் இன்று முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்,றியபோதே நீதி அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 103 கைதிகளுள் தற்போது 54 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றன. அவர்களில் 45 பேர் தமிழர்கள், 6 பேர் சிங்களவர்கள், 3 பேர் முஸ்லிம்களுமாவர்.

இதேநேரம், வழக்கு நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று தண்டனைக்காக சிறைப்படுத்தப்பட்ட 43 கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் நீதி அமைச்சர் என்ற அடிப்படையில் தமக்கு இல்லை.

அரசியல் ரீதியான நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டு கைதுசெய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கருதலாம். ஆனால், குறித்த தரப்பினர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அவை அரசியல் செயற்படா என்தை தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்சென்று வேறேதும் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமாயின் அதற்கான ஒத்துழைப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் வழங்க முடியும்.

அதனைத் தவிர்த்து, தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொள்ள முடியாது என நீதி அமைச்சர் தலதா அதுகோரல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Latest Offers