எஸ்.துரைராஜா உட்பட இருவர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா உட்பட 2 பேரை அரசியலமைப்பு சபை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு சபைக்கு 4 பேரின் பெயர்களை பரிந்துரை செய்திருந்தார்.

அரசியலமைப்பு சபை நேற்று கூடியதுடன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோரை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்க தீர்மானித்தது.

இதனை தவிர மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கவும் அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.

Latest Offers