புதிய பிரதமர் மஹிந்தவிற்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து

Report Print Kamel Kamel in அரசியல்

சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் அப்துல் கயூம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் மஹிந்த ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக தெரிவான மஹிந்த ராஜபக்விற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாலைதீவிற்கு மஹிந்த ராஜபக்ச வழங்கிய ஒத்துழைப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் பலமாக அமைந்தது எனவும், எதிர்கால நடவடிக்கைகள் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers