மைத்திரி - மகிந்தவுக்கு இடையில் டீல் இடம்பெற்றதா?

Report Print Murali Murali in அரசியல்

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் வீட்டு வளாகத்தில் வைத்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ரணில் பிரதமராக இன்னும் சிறிது நாட்கள் இருந்திருந்தால் இந்த நாட்டை எடுத்திருக்க முடியாது. அரச வளங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டிருக்கும்.

எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் நாட்டில் சிறந்த ஆட்சியினை முன்னெடுப்போம். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்சவிற்கு இடையில் டீல் எதுவும் இடம்பெறவில்லை.

இது மக்களின் டீல் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, விரைவில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

எனினும், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் நாள் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers