நாட்டின் ஜனநாயகம் சீரழிந்துள்ளது

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டின் ஜனநாயகம் சீரழிந்து விட்டதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டமை நாட்டின் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்தமையை பறைசாற்றுகின்றது என டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவே இந்தப் பதவி நியமனம் சட்டவிரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாம் தொடர்ச்சியாக போராடி வந்த ஜனநாயகம் பின்னடைந்துள்ளது என சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Latest Offers