மகிந்த தரப்பு மக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Report Print Kamel Kamel in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளின் கீழ் மக்கள் புத்தி சாதூரியமாக செயற்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் கோரியுள்ளளனர்.

ஈட்டப்பட்டுள்ள வெற்றியை சீர்குலைக்கும் நோக்கில் சில நாசகார சக்திகளும் சந்தர்ப்பவாதிகளும் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பவாதிகள் மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

மக்களை வீதியில் இறக்க சிலர் முயற்சிக்கின்றார்கள் எனவும் இதன் ஊடாக குழப்பங்கள் விளைவிக்கப்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே மக்கள் இந்த நிலைகைளை புரிந்து கொண்டு அமைதியாக வீடுகளில் இருக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

Latest Offers