கொழும்பை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றத்தை அடுத்து கொழும்பில் சில பகுதிகளில் சற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக தொடர்ந்தும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தேசிய தொலைக்காட்சி மற்றும் லேக் ஹவுஸ் ஆகிய அரச ஊடக நிறுவனங்களிலும் இவ்வாறான குழப்ப நிலைகள் ஏறபட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது குழப்பங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக கொழும்பு நகரில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers