நாளை காலை சந்திப்போம்! சிரித்த முகத்துடன் விடைபெற்றார் ரணில்

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் அலரி மாளிகையில் இன்று இரவு விசேட சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் நீடித்த இந்த சந்திப்பில் பல அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து அலரி மாளிகைக்கு வெளியில் திரண்டிருந்த பொதுமக்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.

அதன் பின்னர் வெளியில் திரண்டிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சிரித்த முகத்துடன் நாளை காலை சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களுடனான சந்திப்பின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், ஹிருணிகா பிரேமச்சந்திர, அமைச்சர்களான பழனி திகாம்பரம், தலதா அத்துகோரள, சாகல ரட்னாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், இறுதிகட்டத்தில் இந்த பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers