காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் சேவைகள் பேஸ்புக் ஊடாக

Report Print Mubarak in அரசியல்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் பேஸ்புக் ஊடாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் அந்த அலுவலகத்துடன் தொடர்புகொள்வதற்கான வழிமுறைகளை இலகுபடுத்தும் நோக்கில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நோக்கம், பணிப்பாணை, கடமைகள், அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றியும், தொடர்ந்தும் வினவப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இந்த பேஸ்புக் பக்கம் தொகுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அந்த அலுவலகத்தைப் பற்றிய புரிந்துணர்வை வழங்குவதற்கும் அதனுடன் இணைந்து செயற்படுவதற்குமான வாய்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பேஸ்புக் பக்கம் திறக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers