நேற்றிரவு அமைச்சு செயலாளர்களின் புதிய பட்டியல் தயாரிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செயலாளர்களை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சு செயலாளர்களின் புதிய பட்டியல் ஒன்றும் நேற்றிரவு தயாரிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பட்டியலின் அடிப்படையில் பெரும்பாலும் இன்று அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.