யாழ். குடாநாட்டில் வெடி கொழுத்தி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இனவாதிகள்! கடும் அச்சத்தில் தமிழர்கள்

Report Print Nivetha in அரசியல்

இன்று இலங்கையில் ஓர் பாரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி விஜயம் மேற்கொண்டிருக்கும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் இடம்பெற்ற இந்த அரசியல் மாற்றம் தமிழ் மக்களை அச்சமடைய வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். வீதி எங்கும் மகிந்தவின் வரவை எதிர்ப்பார்த்து வெடிக் கொழுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இனவாத சிந்தனை கொண்டவர்கள் வெடி கொழுத்தி கொண்டாடுவதை நேரில் காணக் கூடியதாக உள்ளது.

இந்த நாடு மிக அபாயகரமான ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்கள் தண்ணீரில் இருந்து தரையில் எறியப்பட்ட மீனாக இருக்கின்றார்கள்.

இந்த காலக்கட்டத்தில் நிதானமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச என்பவர் ஓர் இனப்படுகொலையாளி.

பல தமிழ் மக்களை கொன்று அழித்தவர். அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது தமிழர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.