தலதா மாளிகையின் முன்னிலையில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று ?

Report Print Kamel Kamel in அரசியல்

தலதா மாளிகையின் முன்னிலையின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எந்தவொரு தலைவரும் இந்த மாதிரி என்னை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தியது கிடையாது.

கடந்து வந்த பயணத்தின் போது அவருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ எங்களை காட்டிக் கொடுத்துள்ளார்.

அன்று அத்து மீறல்களை செய்த அரசாங்கத்திற்கு எதிராகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சி பீடம் ஏற்றினோம்.

இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கு அல்ல மைத்திரியை நாம் ஜனாதிபதியாக்கினோம்.

இன்று அரசாங்க நிறுவனங்கள் மீது அத்து மீறி பிரவேசித்து குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளது இவற்றைச் செய்யவா ஜனாதிபதி மைத்திரி பேசினார்.

தலதா மாளிகையின் முன்னிலையில் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இவற்றைச் செய்யவா வாக்குறுதி அளித்தார் என்ற கேள்வியை நான் எழுப்புகின்றேன்.

எங்களது முதலாவது நோக்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதேயாகும்.

2002ம் ஆண்டில் சந்திரிக்கா எதிரணியில் இருந்து இவ்வாறான ஓர் காரியத்தை செய்தார் அவரை நாம் ஆட்சிக்குக் கொண்டு வரவில்லை.

எனினும், நாம் ஆட்சிக் கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரி இவ்வாறு செய்துள்ளமை சர்ச்சையான விடயம் என டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Latest Offers