பொலிஸாரும், இராணுவமும் எமது கட்டுப்பாட்டில்! மங்கள அதிரடி

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கை இராணுவமும், பொலிஸாரும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை இலங்கையின் புதிய பிரதமராக நியமித்து, ரணில் விக்ரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன அறிவித்த பின்னர், பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு தரப்புகளுமே தாமே அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்றிரவு கருத்து வெளியிட்டுள்ள மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியே இன்னமும் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நிராகரித்துள்ள அவர், தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் இராணுவமும், காவல்துறையும் இருப்பதாகவும், கூறியுள்ளார்.

அத்துடன் சட்டம், ஒழுங்கு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers