மகிந்தவால் இரவோடு இரவாக தமிழர் தலைநகரில் ஏற்பட்ட மாற்றம்

Report Print Mubarak in அரசியல்

தமிழர் தலைநகரான திருகோணமலையின் கந்தளாய் ,சேருவில, திருகோணமலை மற்றும் கோமரங்கடவெல போன்ற பகுதிகளில் நேற்றிரவு முதல் மகிழ்ச்சி ஆரவாரங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற சந்தோசத்தை மக்கள் பட்டாசு கொளுத்தி ஆடிப்பாடி கொண்டாடியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கும் போதே திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் சந்தோச நகரமாக மாறியதை காணக்கூடியதாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அப்பே ரட்டே, அப்பே ஜனாதிபதி என்ற கோசங்களுடன் கொட்டும் மழையில் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers