மகிந்தவின் அதிரடியான பதவியேற்பு! முன்னாள் முதலமைச்சர் இல்லத்தின் முன்பு மகிழ்ச்சி ஆரவாரம்

Report Print Mubarak in அரசியல்

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் இல்லத்திற்கு முன்பாக பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.

கிண்ணியா, புஹாரியடி சந்தியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதீனின் இல்லத்திற்கு முன்பாகவே நேற்றிரவு மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதீன் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற மகா தலைவன் மகிந்த ராஜபக்ச.

இலங்கையில் உள்ள போக்குவரத்து, சுகாதாரம், கல்வி என சகலவசதிகளையும் ஏற்படுத்தியவர் என்றால் அது மகிந்த ராஜபக்சவே.

இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வர முடியாது. அவர்களின் காலம் முடிந்து விட்டது. முஸ்லிம் மக்களே சந்தோசத்துடன் உங்களின் ஆதரவை வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.