அலரி மாளிகையை முற்றுகையிட்ட ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள்

Report Print Shalini in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்கு பின் நேற்று இரவு முதல் அலரி மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இன்று காலை வரை குறித்த இடத்தில் அரசியல் பிரமுகர்களும், ஊடகவியலாளர்களும் குவிந்திருந்ததை காணக்கூடியதாக உள்ளது.

இதையடுத்து இன்று காலை அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் தமது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதில், அஜித் பீ பெரேரா, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அலரி மாளிகைக்கு வருகைத்தந்திருந்ததுடன், ஜனாதிபதியின் இந்த செயலுக்கு தமது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதில் ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.